Latestமலேசியா

5 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞன் ஒப்புதல் !

ஈப்போ, மே.23- தனது தாயாரின் பராமரிப்பில் இருந்த வந்த ஐந்து வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் புரிந்ததை இளைஞன் ஒருவன் இன்று ஈப்போ நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளான்.

16 வயதுடைய அந்த இளைஞன் பள்ளிக்கு செல்வதில்லை. அவனின் தாயார்  குழந்தைகளை பராமரிக்கும் வேலை செய்து வருகின்றார். அவரின் பராமரிப்பில் இருந்த ஐந்து வயது குழந்தையை அந்த இளைஞன் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று காலை மணி 11 இல் இருந்து 4 மணிக்கு உட்பட்ட நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று மெஜிஸ்திரெட் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட அவன், நீதிபதி நபிஹா முகமட் நூர் முன்னிலையில்  தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். இருப்பினும்  குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞன் குறித்து சமூக நல இலாகாவிடமிருந்து தார்மிக அறிக்கை பெறுவதற்காகவும் தீர்ப்பு வழங்கும் சமயத்தில் ஆலோசனை அதிகாரி இருக்க வேண்டும் என்பதற்காகவும் இவ்வழக்கு  வரும் ஜூன் 26ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 376 (2) இன் கீழ் அவனுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் தண்டனையாக கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அந்த இளைஞனுக்கு ரிம.4,000 வெள்ளி, ஒரு நபர் ஜாமின் அடிப்படையில் இன்று ஜாமின் வழங்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker