Latestமலேசியா

கார் மோதி ராமன் மரணம்.

உலு திராம், மே 24 – ஜாலான் லெபு செமெர்லாங்கில் மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் நடந்த சாலை விபத்தில் இளைஞன் ஒருவர் காலமானார்.
நேற்று மதியம் 4.15 மணியளவில் நடந்த இவ்விபத்தில் 19 வயதுடைய ராமன் பிசாரா தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தின் போது, ராமன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்; அப்பொழுது தாமான் பெலாங்கியிலிருந்து வந்த காரின் வலது பக்க கண்ணாடியை ராமன் மோதியதால்; ராமனின் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரை மோதியுள்ளதாக ஶ்ரீ ஆலாம் காவல் துறை தலைமை அதிகாரியான இஸ்மாயில் டோல்லா கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட அந்த 67 வயதுடைய கார் ஓட்டுனர் எந்த ஒரு காயமின்றி உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து செக்ஷன் 41(1) பிரிவின் 1987-லின் சாலைப்போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரனை நடத்தப்படும் என இஸ்மாயில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker