Latestமலேசியா

கைப்பற்றப்பட்ட நகைகளில் எங்களின் நகைகள் சில இல்லை – குளோபல் ரோயல்டி

கோலாலம்பூர், மே 24 –  ரோஸ்மாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளில் தங்களின் நகைகள் சில இல்லை என லெபனானிய தங்க நகை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் 44 நகைகளை ரோஸ்மாவின் பார்வைக்காக அனுப்பி வைத்ததாகவும்  அவற்றைச் சோதனை நடவடிக்கையில்  போலீசார்  கைப்பற்றியதாக  அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் குருபாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தங்களின் புகாருக்குப் பின்னர், 12,000 நகைகளில் அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க கொடுத்ததில்,  தங்களுடைய நகைகள் சில அதில் இல்லாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் நகைகளை ரோஸ்மா திருப்பி அனுப்ப வேண்டுமென்றும் தவறினால் அதற்கான மொத்த விலையான  14.79 மில்லியன் அமெரிக்க டாலரை அவர் செலுத்த வேண்டுமென அந்நிறுவனம் ரோஸ்மாவின் மீது வழக்கைத் தொடுத்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker