Latestமலேசியா

தேர்தல் வாக்குறுதி: உள்துறை அமைச்சு 63.15% நிறைவேற்றியது – முகைதீன்

புத்ரா ஜெயா, மே 24 – தேர்தல் கொள்கை அறிக்கையின் வாக்குறுதிகளில் 65.15 விழுக்காட்டை உள்துறை அமைச்சு நிறைவேற்றி இருப்பதாக அதன் அமைச்சர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து,  நாட்டில் பாதுகாப்பு, அமைதி மற்றும் பொது சட்ட ஒழுங்கு முழுமையாக நிறைவேற்றப்படும் என உறுதி கூறினார்.  ஓராண்டில் அரசின் வாக்குறுதிகளில்  39.01 விழுக்காட்டை அரசு  நிறைவேற்றி இருப்பதாக  மே 9ஆம் தேதி, பிரதமர் துன் மகாதீர், குறிப்பிட்டிருந்தார்.

தற்போது கள்ளக் குடியேறிகள், குற்றச் செயல்களின் எண்ணிக்கை, நிலம், கடல் எல்லைக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டங்களை மறு ஆய்வு செய்வது போன்ற பிரச்சினைகள் பெரும் சவாலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 100,000 பேருக்கான குற்ற விகிதாசாரம் 66.52 விழுக்காட்டிலிருந்து 61.26ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.  கள்ளக் குடியேறிகளைத் தடுக்க 2,924 முறை சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

286 பேர் பரோல் நடவடிக்கையின் மூலம் விடுவிக்கப்பட்டு,  அக்காலக் கட்டத்தில் அவர்களுக்கு மறு வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சின் அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பின்  மூலம் 27 நடவடிக்கை முன்னெடுப்புகளில் வெற்றி பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker