Latestமலேசியா

நோன்பு பெருநாளை முன்னிட்டு ‘நிக்லோடியன் ராயா’ விளையாட்டு நிகழ்ச்சி

கோலாலம்பூர், மே.24 – சன்வே லகூன் சுற்றுலா தளத்தில், நோன்பு பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, சிறுவர்களுக்காக ‘நிக்லோடியன் ராயா’ என்ற சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை தொடங்கி ஜூன் 9 தேதி வரை, இந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளன. சிறுவர்களை கவரும் விதமாக, தொலைக்காட்சி அனிமேஷன் ‘டொரா அன்ட் பூட்ஸ்’, ‘ஸ்போஞ் போப்’, மற்றும் ‘டீனேஜ் முடன்ட் நிஞ்ஜா துர்ட்லெஸ்’ ஆகிய கதாபாத்திரங்களுடன் சேர்ந்து விளையாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் புதுமைமிக்க இந்த விளையாட்டு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள நாள் ஒன்றுக்கு சுமார் 30 சிறுவர்கள் தேர்வு பெறுவார்கள். அத்துடன், விளையாட்டு நிகழ்ச்சி தொடங்கி முதல் ஐந்து நாள்களுக்கு சுமார் 150 நுழைவு அட்டை வழங்கப்பட உள்ளனர்.  இதன் மூலம், சிறுவர்களுக்கு ஓர் இனிமையான அனுபவமாக இருக்கு என ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker