Latestமலேசியா

பிரத்யேக அகப் பக்கத்தில் வெளியீடு காணப்படும் “இரவா காலம் ” உள்ளூர் தமிழ் திரைப்படம் !

கோலாலம்பூர், மே.24- தனது தயாரிப்பில் உருவாகவுள்ள தமிழ் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு அளிப்பதற்கு பதிலாக பிரத்யேக இணையத்தள அகப்பக்கத்தில் வெளியிடும் புதிய முயற்சியை கேவிஎம் தயரிப்பு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள உள்ளூர் திரைப்படம், “இரவா காதல்”. இத்திரைப்படத்தின் இயக்குனர் கதிர் முன்னதக பல உள்ளூர் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இத்திரைப்படத்தில் கர்ணன் ஜி கிராங்க், கீர்த்திகா, விக்ரன் என இன்னும் பலர் நடிக்கவுள்ளனர். ஸ்டீபன் ஸி ஸக்கரியா இத்திரைப்படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொள்கின்றார். ஜூன் மதம்  இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு அறிமுக விழா அண்மையில் சுபாங் ஜெயாவில் உள்ள மெகாடெக் ஆடிடொரியத்தில் நடைபெற்றது. இத்திரைப்படத்தின் தயாரிப்பு தரப்பினர், கலைஞர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அவர்கள் இத்திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர்.

பெரும் பொருட் செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக இணைய அகப்பக்கத்தில் வெளியிடவுள்ளனர். இதற்காக www.iravaakadhal.comஎன்ற அகப்பக்கமும் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இத்திரைப்படத்தை காண்பதற்கு  ரிம.12.90 வெள்ளி கட்டனம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் வரும் காலங்களில் சிறப்பு கழிவுகளும் வழங்கப்படும் என கேவிஎம் நிறுவனம் தெரிவித்தனர்.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் அகப்பக்கத்தில் திரைப்படத்தை வெளியீடு செய்யும் செயல்பாடு துவங்கியுள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றத்தை உள்ளூர் தமிழ் திரைப்படங்களுக்கும் அறிமுகம் செய்ய இந்த முயற்சியை மேற்கொள்கின்றோம். எனவே பிரத்யேகமக உருவாக்கப்பட்ட அகப் பக்கத்தில் வெளியீடு காணும் முதல் மலேசிய திரைப்படம் இதுவாகும் என்றும் அந்நிறுவனத்தினர் தங்களின் பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker