Latestமலேசியா

மா. அன்பழகனின் “விழிகள் தேடும் இதயம் நாவல்” வெளியீட்டு விழா.

கோலாலம்பூர்,மே.24- மா. அன்பழகனின் “விழிகள் தேடும் இதயம்” நாவல் வெளியீட்டு விழா  மே 25 ஆம் தேதி சனிக்கிழமை (நாளை) மலாயா பல்கலைக்கழக தமிழ் பிரிவு, மொழி, மொழியில் புலத்தில் அமைந்துள்ள ஆங்சானா அரங்கத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

மலாயப் பல்கலைக்கழக தமிழ் பிரிவு, மொழி, மொழியில் புலம் ஏற்பாட்டில் முனைவர் மன்னர் மன்னன் தலைமையில்  நடைபெறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன், முனைவர் இரா செல்வஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர். இணை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் நூல் ஆய்வு உரை வழங்கவுள்ளார்.

மேலும் நிகழ்வில் சிறப்பம்சமாக “இளம் வாசகர்கள் பார்வையில் விழிகள் தேடும் இதயம் நாவல்” என்ற அங்கம் நடைபெறும்.அந்த அங்கத்தில் தமிழ் ஈழமங்கை, குமணன் கோவைச்செல்வன், கயல்விழி இளங்கோவன் ஆகியோர் கருத்து பரிமாற்றம் செய்வார்கள்.

எனவே இந்த வெளியீட்டு விழாவில் பொதுமக்களும் மொழி ஆர்வலர்களும்  திரளாக கலந்து ஆதரிக்குமாறு நூலாசிரியர் மா.அன்பழகன் கேட்டு கொண்டார். இந்நிகழ்வு குறித்து மேல் விபரம்  பெற 013- 3417389 012- 3307032 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker