Latestஉலகம்

இரு சக்கர வாகனத்தில் ஒரு பசு- ஊர் விட்டு ஊர் உல்லாச பயணம்! -(Video)

வீட்டைக் காலி செய்து விட்டு வெகுதூரத்தில் உள்ள வேறொரு இடத்திற்கு குடிமாறும் போது வீட்டில் இருக்கும் பசுவை என்ன செய்வது? என்ற சூழ்நிலையில் இரு சக்கர வாகனமான மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் அழகாக அந்த பசுவை உட்கார வைத்து விட்டு உல்லாசமாக சாலையில் ஓடிக்கொண்டிருந்தார் அதன் உரிமையாளர்.

பாௐஇஸ்தானின் ஒரு கிராமப்பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், சாலையில் சென்ற வழிப்போக்கர்கள் கவர, அவர்கள் எடுத்த காணொளி இப்போது சமூக ஊடகங்களில் மிகப்பரவலாக பரவலாகி வருகிறது.

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் மோட்டார் சைக்கிளின் முன் புறத்தில் அமர்ந்து இந்த பசும் வேடிக்கை பார்த்தவாறு பயணத்தை தொடர்ந்தது.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்து ஒருவர், இதுபற்றி அந்த நபரிடம் கேள்வி எழுப்பியபோது “ஊரையே காலி செய்து விட்டு வேறு ஊருக்கு போகிறேன்> இந்த பசுவை நான் எப்படி அழைத்துச் செல்வது? இதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. ஆனால், என்னுடைய பசு.., ரொம்ப நல்ல பசு… நான் சொன்னபடி அமைதியாக அமர்ந்து என்னோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறது” என்று சிரித்தவாறு சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker