Latestமலேசியா

உறுப்பினருக்கே முக்கியத்துவம்; ஆனாலும் சமுதாயத்திற்கு குரல் கொடுப்போம்! – மஇகா

கோலாலம்பூர், மே. 25- எதிர்கட்சியாக விளங்கும் மஇகா தற்பொழுது உறுப்பினர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. ஆனாலும் சமுதாயப் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தி கொள்ளாது என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

மஇகா மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறும் சிறப்பு கருத்தரங்கத்தின் துவக்க விழா நேற்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் தமதுரையில் மேற்கண்டவாறு பேசினார்.



மஇகா தலைமைத்துவம் தற்பொழுது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றது. எனவே  கிளைகளில் அதிகளவில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற கோட்பாடு இனி கிடையாது.

கட்சிக்கு உழைக்கும் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே போதுமானது. எவ்விதத்திலும் கட்சிக்கு உதவாமல் இருக்கும் உறுப்பினர்கள் உடனடியாக நீக்கப்படுவர். கட்சி உறுப்பினர்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டாலும் மக்கள் நலனிலும் அக்கறை கொள்வோம் என மேலவை தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய மஇகா மகளிர் பிரிவு தலைவி உஷா நந்தினி, மகளிர் பிரிவினருக்கு பலன் அளிக்கு வகையில் பல திட்டங்களை செயல்ப்படுத்தி வருகின்றோம். வரும் காலங்களில் மகளிர் பிரிவினர் அனைவரும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்க இத்திட்டங்கள் உதவியாக இருக்கும் என கூறினார்.

நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்தரங்கு துவக்க விழா மட்டுமில்லாது  மகளிர் பிரிவினருக்காக பிரத்யேகமாக வெளியிடப்படும் “சம்யுக்தா” மாதாந்திர இதழும் அறிமுகம் செய்யப்பட்டது. மகளிர் பிரிவினரின் நடவடிக்கைகள், அனுபவ பகிர்வு, தலைவர்கள் நேர்காணல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய இந்த இதழ் அச்சு பதிப்பு, இணையத் தள பதிப்பு என இரு வகையில் வெளியிடப்படவுள்ளது.

தொடர்ந்து ஓய்வு பெற்ற – நலிந்த மகளிர் பிரிவு உறுப்பினர்களுக்கு உதவ “பெண்ணே” என்ற சிறப்பு திட்டமும் இந்த நிகழ்வில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் தவணையாக 10 உறுப்பினர்களுக்கு உதவி நிதி வழங்கப்பட்டது. நிகழ்வில் பிரமுகர்களாக கலந்து கொண்ட டான்ஶ்ரீ விக்னேஷ்வரனும் கட்சி துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரனும் இந்த திட்டங்களை அதிகாரப்பூர்வமக துவக்கி வைத்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker