Latestமலேசியா

ஓடையில் கையில்லாத மனித உடல்! முதலையின் வேலையா?

சண்டாக்கான், மே 25 –  முதலையினால் தாக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படும் கையில்லாத ஆடவரின் சடலம்,  ஓடை ஒன்றில் மிதக்கக் கண்டெடுக்கப்பட்டது.

38 வயதான சைனி மஹ்மியின் உடல்  கடந்த வியாழக்கிழமை மாலையில்  வீட்டுக்கருகில் இருக்கும் ஓடை ஒன்றில் காலை 9.30 மணியளவில் காணப்பட்டது. படகு ஒன்றிலிருந்து தமது வீட்டுக்குப் பொருள்களைக் கொண்டு செல்லும்போது, அவர் முதலையினால் தாக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அவரது நெஞ்சுப்பகுதி மற்றும் உடலில் முதலையினால்  கடிக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டிருந்தன.  சம்பவம் நடந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker