Latestமலேசியா

காணாமல் போன முதியவர் நீர் வற்றிய கிணற்றிலிருந்து மீட்பு !

சித்தியவான், மே.25- காணாமல் போனதாக தேடப்பட்ட  முதியவர் ஒருவர் நீர் வற்றிய கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

சித்தியவான் கம்போங் கோ பகுதியை சேர்ந்த சொங் எங் கூன் (வயது 70) என்ற அந்த முதியவர் நேற்று முன்தினம் பால் மரம் சீவும் பணிக்கு சென்றுள்ளார். பணி நேரம் கடந்தும் அவர் வீடு திரும்பாததால்  குடும்பத்தினர் காவல் துறையில் நேற்று காலை புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல் துறையினர், தீயணைப்பு – மீட்பு படையினர், பொது பாதுகாப்பு படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இங்குள்ள பத்து 6 லெகிர் பகுதியில் அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கிடப்பதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அங்கு விரைந்த  படையினர் அம்முதியவரை அருகில் உள்ள கிணற்றில் கண்டுள்ளனர்.

கிணற்றில் நீர் வற்றியதால் சுமார் 4 மீட்டர் அளவில் சகதி இருந்தது. முதியவர் அந்த சகதியில் சிக்கியுள்ளார்.  கயிறு பயன்படுத்தி அவரை கிணற்றிலிருந்து நேற்று இரவு 10 மணிவளவில் வெளியே கொண்டு வந்தோம் என சித்தியவான் தீயணைப்பு – மீட்பு படை தலைவர் முகமட் ஸாக்கி தெரிவித்தார்.

அம்முதியவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் மிகவும் பலவீனமாக காணப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுப்பி வைத்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker