Latestமலேசியா

கூட்டரசுச் சாலையின் இடது பக்கத் தடம் – 15 நாள்களுக்கு மூடப்படும்

கோலாலம்பூர், மே. 25-  கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா கூட்டரசு விரைவுச் சாலையின் இடது பக்கத் தடம் மே  26லிருந்து ஜூன் 9ஆம் தேதி வரை இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை  வாகனப் போக்குவரத்துக்கு மூடப்படும்.

செத்தியவங்சா- பந்தாய் விரவுச் சாலைக்கான  துண்களை நிறுவும் பணிக்காக அந்தச் சாலை மூடப்படுவதாக  டியூக் 3 நெடுஞ்சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயாவுக்குச் செல்வோர், மற்ற தடங்களைப் பயன்படுத்தலாம்.  ஆபத்து அவசர உதவுக் குழு (இஆர்டி) சேவையில் ஈடுபடுத்தப்படும். வாகனமோட்டிகளுக்கு உதவுவதோடு, வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அது பணிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker