Latestமலேசியா

கோலாலம்பூர் தேவஸ்தான ஊழல் புகாரை விசாரிக்க கோரும் பேரணி நடந்தே தீரும் – ஆகம அணி

பெட்டாலிங் ஜெயா, மே.25- கோலாலம்பூர் ஶ்ரீமகாமாரியம்மன் தேவஸ்தானத்தில் ஊழல்கள் நடந்து இருப்பதாக கூறி அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தாம் நடத்தவிருக்கும் பேரணியில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி கூறினார்.

மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நண்பகல் 12.30 மணியளவில்  இந்த பேரணியில் நடத்தப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பேரணியை நடத்த அனுமதிக்கக்கூடாது எனக் கோரி கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று தேவஸ்தானம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தைச் சேர்ந்த அறங்காவலர்களாக சேதுபதி மற்றும் கதிரேசன் ஆகியோர் இந்த புகாரைச் செய்துள்ளனர்.

அதேவேளையில் சிலிம் ரிவர்- தஞ்சோங் மாலிம் சமூக நல மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் அதன் மூத்த செயலவை உறுப்பினர் மைத்ரேயர், இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இந்தப் பேரணிக்கு எதிராக புகார் செய்துள்ளார்.

இந்துக்களிடையே பிளவை ஏற்படுத்தி பெரும் பதற்றத்தை உருவாக்கி விடும் என்று போலீஸ் புகாரில் கூறப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே இந்தப் போலீஸ் புகார் பற்றி கருத்துரைத்த ஆகம அணித் தலைவர் அருண் துரைசாமி, இதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

இந்த ஊழல்கள் தொடர்பில் தம்மிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. எது குறித்தும் தாம் தயங்கப் போவதில்லை. பேரணி நிச்சயம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்றார் அவர்.

யார் புகார் செய்திருந்தாலும், இது குறித்து போலீசார் தம்மிடம் எந்த விளக்கமும் இதுவரை கோரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த பேரணிக்கு திரண்டு வருமாறு தனது ஆதரவாளர்களை அவர் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பேரணியில் சிவராசா மற்றும் குலசேகரன் ஆகியோரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்று ஆகம அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker