Latestமலேசியா

சிங்கையில் மரணதண்டனை: பன்னீர் செல்வத்திற்கு மலேசிய அரசு சட்ட உதவி!

கோலாலம்பூர், மே.26- சிங்கப்பூரில் தன்னுடைய மரண தண்டனை மீதான கருணை கோரிக்கை நிராகரிக்கப் பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டுக்கான சிறந்த சட்ட உதவிகளை பன்னீர்செல்வம் பரந்தாமன் என்ற 32 வயதுடைய மலேசியருக்கு அரசாங்கம் வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகம் இந்த உதவியை அவருக்கு வழங்கும். எனினும், அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டினை அவரது குடும்பத்தினர் தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மரண தண்டனைக்கு எதிரான கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் பன்னீர்செல்வத்திற்கு நேற்று அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருக்கான சிறந்த சட்ட உதவிகளை வழங்க மலேசிய அரசாங்கம் தயாராக உள்ளது என்று டத்தோ சைஃபுடின் சொன்னார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 3- ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் 51.84 கிராம் டையாமோர்பைன் என்ற போதைப்பொருளை கடத்தியதாக சிங்கப்பூர் நீதிமன்றத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜூன் 27ஆம் தேதியன்று பன்னீர்செல்வத்திற்கு மரண தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker