Latestமலேசியா

ஜொகூர் மந்திரி பெசார் பதவி; விலகியது சரியே ! -சபியான்

கெம்பாஸ்,மே.25- ஜொகூர் மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து நான் விலகியது மிகச் சரியான முடிவு தான் என்று கெம்பாஸ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒஸ்மான் சபியான் கருத்துரைத்துள்ளார்.

14ஆவது பொது தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து பெர்சத்து கட்சியை சேர்ந்த ஒஸ்மான் சபியனுக்கு ஜொகூர் மாநில மந்திரி பெசார் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் அவர் அப்பதவியிலிருந்து விலகினார். அதனையடுத்து  புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஷாரூடீன் ஜமால் அப்பதவியை ஏற்றார்.

தற்பொழுது ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஒஸ்மான், நான் மூன்று முறை தேசசிய முன்ணைனியை சார்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளேன். இப்பதவியை தவிர மாநில ரீதியில் வேறு எந்த பதவிகளையும் நான் ஏற்றதில்லை. அதன் அடிப்படையில் தான் நான் கட்சி மாறவும் இல்லை.

ஆனால் பொதுத் தேர்தலின் வெற்றிக்கு பிறகு எனக்கு மாநில மந்திரி பெசார் பதவி வழங்கப்படும் என துளியளவும் நினைத்து பார்த்ததில்லை. ஆயினும் அப்பதவியிலிருந்து விலகா விட்டால் எனது நற்பெயருக்கும் ஜொகூர் மாநில அரசியல் அமைப்பிற்கும் களங்கம் ஏற்பட்டிருக்க கூடும் என கூறியுள்ளார்.

ஜொகூர் மாநில ஆட்சியாளர் தரப்பு – மத்திய அரசாங்கம் இடையே ஏற்பட்ட கருத்து வேற்பாடுகளே இந்த ராஜினாமாவிற்கு காரணம் என்பது போல் அவரின் பதில் அமைந்துள்ளது என கூறப்படுகின்றது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker