Latestமலேசியா

தமிழக அனைத்துலக விவசாய & உணவு கண்காட்சி: மலேசிய இந்தியர்கள் பங்கேற்பு!

கோலாலம்பூர், மே.25-  தமிழகத்துடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்த  கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனம்,  தமிழ்நாடு வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து மேலும் ஒரு நிகழ்வில் பங்கேற்கவுள்ளது என அதன் தலைமை செயலாளர் நிவாஸ் ராகவன் குறிப்பிட்டார்.

வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை தமிழ்நாடு, மதுரையில் நடைபெறவுள்ள 2019 ” துடிப்புமிக்க தமிழ்நாடு” சர்வதேச விவசாய மற்றும் உணவு பொருட்கள் கண்காட்சியில் மலேசியாவைச் சார்ந்த இந்தியர் நிறுவனங்களும் பங்கெடுக்க தமிழ்நாடு வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு வர்த்தக சம்மேளனம் இந்தக் கண்காட்சியை இரண்டாவது முறையாக நடத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற முதல் முறை கண்காட்சியில் கோலாலம்பூர் – சிலங்கூர் இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனத்தை பிரதிநிதித்து 20 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

அவ்வகையில் இம்முறை கண்காட்சியில் சம்மேளனத்தை பிரதிநிதித்து 35க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பர்க்கப்படுகின்றது. காய்கறிகள் – பழங்கள் , பால்  மாவு ,  மசாலா தூள் , தின்பண்டங்கள் , சமையலறை தளவாடங்கள் என விவசாய மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களின் உற்பத்தி – தயாரிப்பு பொருட்களைப் பிரபலப்படுத்தலாம் .

இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் நிவாஸ் விவரித்தார். நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தமிழ்நாடு வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker