Latestமலேசியா

தலைநகரில் ஐவரில் ஒருவர் பணப் பிரச்சினையில் தவிப்பு!

கோலாலம்பூர், மே 25 – அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி கோலாலம்பூர்வாசிகளில் 16.2 விழுக்காட்டினர் பணப் பிரச்சினையில் சிக்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஆய்வில் கலந்து கொண்ட  531 பேரில் குறைந்தது 100 பேர்  பொருளாதார வீழ்ச்சியினால் தாங்கள்  பாதிக்கப் பட்டிருப்பதாகவும் 52.2 விழுக்காட்டினர் வரும் 12 மாதங்களில், வருமான வளர்ச்சி இருக்காது எனவும்  குறிப்பிட்டுள்ளனர்.

31.6 விழுக்காட்டினர் கடந்த ஆண்டை விட இவ்வாண்டில் சிறிது முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.யுசிஎஸ்ஐ யின் பேராசிரியர் நோப்பாடோன் கனிக்கா கூறும்போது, 47,1 விழுக்காட்டினார் நிதிப் பிரச்சைனை தொடரும் என்றும் 34.6 விழுக்காட்டினர் பிரச்சினை சற்று தீரும் என்றும்  18,3 விழுக்காட்டினர்  பொருளாதாரம்  பிரகாசமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அதற்கு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம், குறைந்த சம்பள, திறன் குன்றிய நிலை, சீரான  வருமானப் பகிர்வு இல்லாமை  போன்றவற்றை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker