Latestஉலகம்

போலி மலேசிய கடப்பிதழ்: 5 லட்சம் யு.எஸ். டாலருடன் நபர் கைது!

பேங்காக், மே 25 –  போலியான மலேசிய கடப்பிதழையும் 5 லட்சம் அமெரிக்க டாலrum (ரிம. 21 லட்சம்) வைத்திருந்த நபர் தாய்லாந்தின் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் வைத்திருந்த போலியான மலேசிய கடப்பிதழை முகப்பை வைத்துக் கண்காணிக்கும் கருவி, ஏற்றுகொள்ளாததை அடுத்து அது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபர் பிலிப்பைன்ஸ் விமானத்தில்  ஏற முயன்றபோது, கைது செய்யப்பட்டார்.  அந்தப் போலியான மலேசிய கடப்பிதழைப் பயன்படுத்தி  பல முறை  தாய்லாந்து-மியன்மார் எல்லை வழியாகப்  அந்த நபர் பயணித்ததாகக் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தபட்டுள்ளனரா? என்பது பற்றி ஆராய, அந் நபர்  தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது அறிவிக்கப் படவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker