Latestமலேசியா

முதலில் உள்நாட்டு மாணவர்களுக்கு உதவுங்கள்! -அரசுக்கு அறிவுறுத்து

கூச்சிங்,மே.25- முதலில் உள்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்துங்கள் ; அந்நிய மாணவர்களுக்கு உதவுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்  என பன்சா டாயாக் சரவா கட்சி (பிபிடிஎஸ்பி) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள 12 உயர்க் கல்வி கூடங்களில் பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பயில உபகாரச் சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது என பிரதமர் துன் மகாதீர் அண்மையில் அறிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு நாட்டில் பரவாலக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல அரசியல் கட்சிகள் இதனை கண்டுத்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில் தற்பொழுது பன்சா டாயாக் சரவா கட்சியும் தங்களது கருத்தினை முன் வைத்துள்ளனர்.

உதவும் மனப்பான்மை கொண்டிருப்பது நல்லது தான். ஆனால் அரசாங்கம் முதலில் சொந்த நாட்டு மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மலேசிய மாணவர்கள் பலர் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்வி கட்டணம், கல்வி கடன் என பெரும் சுமைகளை அவர்கள் சுமந்து வருகின்றனர். சிறந்த தேர்ச்சிகளை பெற்ற போதிலும் உபகாரச் சம்பளம், அரசாங்க உதவி கிடைக்காமல் தவிக்கும் உள்நாட்டு மாணவர்களும்  அதிகளவில் உள்ளனர்.

அவர்களின் பிரச்னைகளை களைந்த பின் அந்நிய மாணவர்களுக்கு உதவலாம் என அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் வில்லியம் மங்கோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும்  இங்கு பிடிபிடிஎன் கல்வி கடன் விவகாரம் கூட இன்னும் தீர்க்கப்பட வில்லை. ஆனால் அதற்குள் அந்நிய மானவர்களுக்கு உதவுவது எவ்வித நியாயம் என்று கேள்வி எழுப்பிய வில்லியம்,  இத்திட்டத்தை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker