Latestஉலகம்

 யார் அடுத்த பிரிட்டீஷ் பிரதமர்? போட்டா போட்டி வலுக்கிறது!

லண்டன், மே..25- அடுத்த மாதத்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகப்போவதாக பிரிட்டிஷ் பிரதமர் தெராசா மே  அறிவித்திருப்பதை தொடர்ந்து அடுத்த பிரிட்டிஷ் பிரதமர் யார் என்கிற போட்டா போட்டி தொடங்கி விட்டது.

கட்சி தலைமைத்துவ  தேர்தலில் களமிறங்க பலரும் தயாராகி வருகின்றனர் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற ஒருவர்தான் பிரிட்டனில் பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாத இறுதிக்குள் கட்சி தலைமைத்துவ தேர்தலின் வழி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் அதன் பின்னர் பிரதமர் பொறுப்பை தெரேசா மே,  புதிய தலைவரிடம் ஒப்படைப்பார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு எம்பிக்கள் யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம். குறிப்பாக, இதர இரு எம்பிக்களின் ஆதரவு இருந்தால், ஒரு எம்பி தலைமைப் பதவிக்கு போட்டியிட முடியும்.

அந்தவகையில் இப்போது நான்கு முக்கிய தலைகள் களத்தில் இறங்கி இருக்கின்றன. இதோடு இந்தப் பட்டியல் முடிந்து விடாது. கிட்டத்தட்ட ஒரு டஜன் பேராவது கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.

எனினும், வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்ட், அனைத்துலக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோரி ஸ்டுவெர்ட்,  முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சன் மற்றும் முன்னாள் பொதுப்பணி ஓய்வூதிய துறை அமைச்சர் எச்சரிக்கை எஸ்தர் மெக்வே ஆகிய நால்வரும் தற்போது களத்தில் இறங்கி இருக்கின்றனர்.  இவர்களில் போரிஸ் ஜோன்சன் அதிக செல்வாக்கு கொண்டவர் என்றே கருதப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker