Latestமலேசியா

தேர்தல் வெற்றி: பிரதமர் மோடிக்கு துன் மகாதீர் வாழ்த்து!

கோலாலம்பூர், மே. 26- இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றுப்பூர்வமான வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

“வாழ்த்துக்கள்..! இந்திய பொதுத் தேர்தலில் நீங்கள் மிகத் தெளிவான வெற்றி பெற்றிருக்கிறீர்கள். நம்முடைய உறவுகளை குறிப்பாக வர்த்தகம் தொழில் துறைகளில் வலுப்படுத்துவோம்” என்று தம்முடைய வாழ்த்துச் செய்தியில் துன் மகாதீர் கூறியுள்ளார்>

அணமையில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று இரண்டாவது தவணையாக பிரதமர் மோடி, ஆட்சி அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker