Latestமலேசியா

நான் குறிப்பிட்டது ஒரு சில அதிகாரிகளை தான் ; ஒட்டு மொத்த ஆணையத்தையும் அல்ல !

பெட்டாலிங் ஜெயா,மே.26- நான் பத்துமலை நில விவகாரத்தில் கீழிறுப்பு வேலை செய்த ஒரு சில அதிகாரிகளை குற்றம் சாட்டினேன் தவிர மொத்த ஆணையத்தையும் தரைகுறைவாக பேசவில்லை என மலேசிய இந்து ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்தார்.

பத்துமலை தேவஸ்தானத்தின் முக்கிய பதவியை வகிப்பவர் வீட்டில் அண்மையில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தி ரொக்கப் பணம், தங்க நகை, விலையுயர்ந்த ஆபரணங்களை கைப்பற்றியது.

இதையடுத்து தற்பொழுது அவர்கள் மீது விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆணையத்தை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் எதிர் தரப்பினருக்கு வேலை செய்வதாக நாங்கள் கேள்வியுற்றோம். இது தொடர்பில் சில ஆதாரங்களும் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கோரி அண்மையில் நாங்கள் ஊழல் தடுப்பு ஆணைய இயக்குனரிடம் புகார் வழங்கி செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தையும் நடத்தினோம்.

ஆனால் தற்பொழுது எங்கள் அமைப்பு குறிப்பாக நான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பொது வெளியில் கருத்துக்களை பகிர்ந்ததாக கோரி ஆலய தேவஸ்தானத்தைச் சேர்ந்த இருவர் காவல் துறையிடம் புகார் வழங்கியதாக கேள்வியுற்றேன்.

இது குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியது. அவர்கள் மட்டுமல்லாது இன்னும் சிலரும் என் மீது புகார் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது

இருப்பினும் இந்த புகார் சம்பவங்கள் குறித்து எனக்கு உறுதியான தலவல் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. காவல் துறையும் இது குறித்து இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் விவரித்தார்.

நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் நான் ஒட்டுமொத்த ஆணையத்தையும் இழிவாக பேசவில்லை. அதில் பணி புரியும் சில அதிகாரிகள் மட்டுமே எதிர் அணிக்கு தகவல் வழங்கி குற்றம் இழித்துள்ளனர் என குறிப்பிட்டுருந்தேன். அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட கானொளிகளும் உள்ளன.

எனவே இந்த புகார் சம்பவங்களுக்கு
நான் முன்னுரிமை அளிக்க போவதில்லை. எங்கள் அணியின் நோக்கம் இவ்விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே.

இதன் அடிப்படையில் நோன்பு பெரு நாள் முடிந்தவுடன் இவ்விவகாரம் தொடர்பில் ஆகம அணி – ஊழல் தடுப்பு ஆணையம் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என தாம் நம்புவதாகவும் அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker