Latestசினிமா

மகளுக்கு பாலியல் மிரட்டல்: மோடியை விளாசிய இயக்குனர்! 

மும்பை,மே. 26 -இந்தித் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். தேவ் டி, கேங்ஸ் ஆப் வசேபூர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் .

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு செய்தி பகிர்ந்த அனுராக் டியர் மோடி சார் உங்களுடைய வெற்றிக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள்.

“என் மகளை பாலியல் ரீதியாக மிரட்டி உங்கள் வெற்றியை கொண்டாடும் உங்கள் தொண்டர்களை நான் எப்படி கையாள்வது? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கூடவே அவரது பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் வந்த பாலியல் மிரட்டல் பதிவையும் அதில் இணைத்து டுவிட் செய்துள்ளார். அவரது டுவிட் குறித்து ம்மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருந்த  போதிலும் அனுராக் ரசிகர்கள் அவருக்கு  ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். தன்னுடைய மகளுக்கு வந்த பாலியல் மிரட்டல் குறித்து  அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker