Latestஉலகம்

லீ குவான் இயூவின் பேரன்- ஆண் நண்பரை மணந்தார்!

கோலாலம்பூர், மே. 26- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் பேரனான லி குவான் வுயூ என்பவர் தன்னுடைய ஆண் நண்பரை தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்தத் திருமண அறிவிப்பை, லி குவான் வூயூவை மணந்து கொண்ட அவரது நண்பரான ஹெங் யீ ரூய் என்ற இளைஞர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவித்து இருக்கிறார்.

“என்னுடைய ஆத்ம துணைவனான குவான் வுயூவை இன்று நான் மணந்து கொண்டிருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஜோடி, தங்களுடைய திருமணப் புகைப்படத்தை பிங்க் டாட் சிங்கப்பூர் என்ற சமூக இயக்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த இயக்கம் ஓரின தொடர்பாளர்களுக்கு எதிரான ஓர் இயக்கம் ஆகும்.

முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் மகனும் நடப்பு பிரதமர் லீ சியன் லூங்கின் இளைய சகோதரரான லீ சியன் யாங்கின் இரண்டாவது மகன் தான் குவான் வூயூ என்பவராவார்.

ஒரே பாலரிடையேயான திருமணத்தை அங்கீகரித்திருக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும். தற்போது ஆசியாவில் அத்தகைய திருமணத்தை அங்கீரிக்கும் நாடாக தைவான் உருவெடுத்து வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker