Latestமலேசியா

விஷ வாயு கசிவு: ஒருவர் பலி, இருவர் காயம்

ஈப்போ, மே 26 – பெட்ரோல் நிலையத்தில் விஷ வாயு தாக்கி வங்காளதேசத் தொழிலாளி மரணமடைந்த வேளையில் இருவர் காயமடைந்தனர்.

ஈப்போ-லுமுட் நெடுஞ்சாலையின் 6ஆவது கிலோமீட்டரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இச்சம்பவம் நேற்று  காலை 7.30 மணியளவில் நிகழ்ந்தது.

நிலத்துக்கு அடியில் எரிவாயு குழாயைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, வாயு தாக்கி ஒருவர் மரணமடைந்த வேளையில், ஒரு உள்ளூர்க்காரரும் ஒரு  வங்காளதேசத் தொழிலாளியும் காயம் அடைந்தனர்.

தீயணைப்பு, மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டதோடு மேன்ஹோல் எனப்படும் நிலத்துக்கு அடியில் செல்லும் துவாரத்தை அடைத்தனர். காயமடைந்தவர்கள் ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையில்,  இறந்தவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker