Latestசினிமா

ஆண்மையில்லாத் தனமா?- இளையராஜாவுக்கு 96 படக்குழுவினர் பதிலடி!

சென்னை, மே. 27- தான் இசையமைத்த பழைய பாடல்களை 96 படத்தில் இடையிடையே பயன்படுத்தியதை ஒட்டி அப்படத்தின் இயக்குனருக்கு ஆண்மையில்லாத்தனம் என்பதாக கடுமையாக சாடியுள்ள இளையராஜாவுக்கு படக்குழுவினர் பதில் அறிந்துள்ளனர்.

96 திரைப்படம் விஜய் சேதுபதி -திரிஷா நடிப்பில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றியைத்தந்த ஒரு காதல் படம். இப்படம் தமிழகம் தாண்டி கேரளா, தெலுங்கு,கன்னடம் என அனைத்து மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா இளையராஜாவின் பாடல்களை தான் பாடுவது போல் காட்சியமைக்கப் பட்டிருந்த து.

இந்நிலையில் தன் பாடலை அனுமதி இல்லாமல் இப் படத்தில் பயன்படுத்தியதை ஆண்மை இல்லை என்ற கடுமையான வார்த்தையில் இளையராஜா கண்டித்துள்ளார்.

அதற்கு 96 படக்குழு தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டு உள்ளது. அதில் 96 பாடல்களுக்கு நாங்கள் ராயல்ட்டி கொடுத்துள்ளோம் எனக் கூறி உள்ளனர். மேலும், இளையராஜாவின் பல பாடல்களை அவருடைய மகன் யுவன் தன் படங்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker