Latestஇந்தியா

ஜாகிரின் கணக்கில் போலிப் பெயர்களில் நன்கொடைகள்! இந்தியாபுலனாய்வு!

புதுடில்லி, மே. 27- மதப் பிரச்சாரம் மூலம் வன்முறையை தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டுள்ள முஸ்லிம் மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் வங்கிக் கணக்குகளில் போலி பெயர்கள் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை செலுத்தப் பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஆர்.எப் எனப்படும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜாகிர் நாயக் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் மக்களிடையே சமய விரோதத்தை ஏற்படுத்தியதாகவும் வன்முறையை தூண்டி விட்ட தாகவும் அவர் மீது 2016 இல் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போதபவர்மலேசியாவில் வசிப்பிட அந்தஸ்தை பெற்று வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. ஜாகிர் நாயக் நாயக் மற்றும் அவருக்கு சொந்தமான அறக்கட்டளை செய்துள்ள பண மோசடிகள் குறித்து இந்திய அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறை நடத்திய விசாரணை அறிக்கையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியுள்ளதாவது: ஐக்கிய அரபு சிற்றரசு, சவுதி அரேபியா, குவைத், மலேசியா என பல நாடுகளில் இருந்து ஜாகிர் நாயக் மற்றும் அவருக்கு சொந்தமான அறக்கட்டளையின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப் பட்டுள்ளது.

நன்கொடை என்ற பெயரில் போலியான பெயர்களில் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 2003 முதல் 2017 வரை 64. 86 கோடி நன்கொடைகள் இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப் பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு சிற்றரசிலுள்ள ஜாகிர் நாயக்கின் வங்கி கணக்கில் 49.2 0கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker