Latestமலேசியா

ஜொகூர் பாருவில் பாட்டியை வசியம் செய்து மோசடி: சீனா பெண்களை கட்டி வைத்து அடித்தனர்!

ஜொகூர் பாரு,மே. 27- வயதான பாட்டி ஒருவரை ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை அபகரித்ததாக சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்களை இங்குள்ள மார்க்கெட் ஒன்றில் அங்காடி வியாபாரிகள் கட்டிப்போட்டு அடித்து உதைத்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் அந்த இரு பெண்களின் முன்னால் அட்டைகளை  வைத்துவிட்டு அதில், ‘வசியக் கும்பல்’ என்று சீனத்தில் எழுதி வைத்திருந்தனர். இந்தச் சம்பவம் தாமான் மெகா ரீயா மார்க்கெட்டில் நடந்துள்ளது.

இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் இங்கு உள்ள பல அங்காடி கடைகளுக்கு மத்தியில் இந்த இரண்டு சீன நாட்டுப் பெண்களும் கட்டி வைக்கப்பட்டு இருந்தனர்.

அங்கு ஒரு நபர் கையில் குச்சியை வைத்துக் கொண்டு அவர்களை அடித்த வண்ணம் இருந்தார். இதனால் வலி தாங்காமல் அந்தப் பெண்கள் கதறி அழுதனர். மேலும், சிலர் அவர்களை அணுகி முட்டை மற்றும் பழங்களால் வீசியடித்த சம்பவமும் நடந்தது.

இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது ஸ்ரீ ஆலம் போலீஸ் படையின் துணைத் தலைவர் ஷாருல் அனுவார் முஷாடாட் உறுதிப்படுத்தினார். இது தொடர்பான விசாரணையின் போது சில தகவல்கள் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மார்க்கெட்டுக்கு 63 பாட்டி ஒருவரை இந்தச் சீன நாட்டுப் பெண்களும் மற்றொரு நபரும் சேர்ந்து ஏமாற்றியுள்ளனர். குறிப்பாக, அந்த பாட்டியை அணுகி அவருடைய குடும்பம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்களை துரதிஷ்டம் கவ்வி கொண்டு இருப்பதாகவும் கூறி முதலில் அச்சுறுத்தி உள்ளனர்.

பின்னர் அந்தத் துரதிஷ்டத்தை போக்க வேண்டுமானால் தங்களிடம் அதற்கான மருந்து இருக்கிறது என்று கூறி, அந்தப் பாட்டியை பின்புறமிருந்து ஒருவர் இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் அந்த மருந்தை அவரிடம் காட்டினார்.

அப்போது பாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட அரை மயக்கத்தில் இருந்த அவரிடம் ‘நாங்கள் சொல்லுவதைச் செய்யவேண்டும்” என்று அவர்கள் கூறியதை, பாட்டி ஏற்றுக் கொண்டு அதன்படி செயல்படத் தொடங்கினார்.

அந்தப் பாட்டியிடம் ‘நீங்கள் வீட்டுக்குப் போய் அங்குள்ள பணம், நகைகள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். அதை வைத்து தான் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற துரஷ்டத்தை நீக்கப் போகிறோம் என்று அந்த இந்த சீன நாட்டுப் பெண்கள் கூறியுள்ளனர்.

அதன்படி அந்த பாட்டியும் வீட்டிற்குச் சென்று நகைகள், பணம் ஆகியவற்றுடன் திரும்பி வந்து அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். பின்னர் அந்த நகைகள், பணத்தையெல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அதனை திறந்து பார்க்க வேண்டும் என்று அந்த பாட்டியிடம் கூறிள்ளனர்.

அவரும் அதை ஏற்றுக் கொண்டு இரண்டு வாரம் கழித்து வீட்டில் திறந்து பார்த்தபோது மினரல் வாட்டர் போத்தல்கள் தான் இருந்தன. இதுகுறித்து அந்தப் பாட்டி போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை.

எனினும் மார்க்கெட்டில் உள்ள அங்காடிக்காரர்களிடம் அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று நடந்துள்ளது.

இந்நிலையில் அந்த சீன நாட்டுப் பெண்கள் மீண்டும் அந்த மார்க்கெட் வட்டாரத்தில் சுற்றிக் கொண்டிருப்பதை கண்டு பிடித்த அங்காடிக்காரர்கள் அவர்கள் மடக்கிப்பிடித்தனர்.

எனினும் மூன்றாவது நபர் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சீன நாட்டு பெண்களிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்று ஸ்ரீ ஆலம் போலீஸ் படையின் துறை துணைத் தலைவர் ஷாருலனுவார் தெரிவித்தார்.

அங்காடி கடைக்காரர்கள் தாக்கப்பட்டதால் காயமடைந்திருந்த அந்த சீன நாட்டு பெண்கள் இருவரும் போலீசாரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணைக்கு ஏதுவாக அந்தப் பெண்கள் இருவரும் மே மாதம் 28ஆம் தேதி வரையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இருப்பார் என்று சார் விளங்குவார் தெரிவித்தார்.

 

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker