Latestமலேசியா

பிரிட்டனின் பிளாஸ்டிக் கழிவுகள் ஈப்போ அருகே குவிப்பு! அதிர்ச்சி!

ஈப்போ, மே.27- மறு சுழற்சி செய்ய திட்டமிடப்பட்டிருந்த பிரிட்டனின் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் மலேசிய பகுதிகளில் காணப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தொலைக்காட்சி தொகுப்பாளரான பெர்ன்லேய் – வித்திங்ஸ் என்பவர், ஈப்போவில் உள்ள வனப்பகுதியில் சுமார் 6 மீட்டர் உயரம் வரை பிளாஸ்டிக் கழிவுகளை அடையாளம் கண்டுள்ளார்.

அவை அனைத்தும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தது. அதில் பிரிட்டிஷ் பல்பொருள் அங்காடிகள் மற்றும் குழு மறுசுழற்சி துறைகள் கைரேகைகள் உள்ளது என்றும்  அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடம் பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பூமி போல் உள்ளது. முன்னதாக பிரிட்டனில் நான் முறையாக குப்பைகளை வீசுகிறேன் என எண்ணிக் கொண்டிருந்தேன். அது முறையாக மறு சுழற்சி செய்யப்படுகின்றது என நம்பினேன்.

ஆனல் இங்கு வந்து பார்க்கும் பொழுது, இவ்வளவு நாள் நான் ஏமாற்றப் பட்டுள்ளேன் என உணர்ந்தேன். எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் அச்செய்தியில் தகவல் உள்ளது.

2018ஆம் ஆண்டு மட்டும் சுமார் 665,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கிலாந்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை சீனா தான் இந்த கழிவுகளை பெரும் மிகப்பெரிய பெறுநராக இருந்தது. இருப்பினும், சீன அரசாங்கம் சமீபத்தில் இந்த ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

அதனை தொடர்ந்து  அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகளை பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக தற்பொழுது மலேசியா விளங்கிகின்றது. கடந்த ஆண்டு மட்டும் 130,000 டன் கழிவுகல் இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.

இந்நிலையில் கண்டறியப்பட்ட விபரங்கள் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் மூன்று பகுதிகளாக வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker