Latestமலேசியா

மூன்று வாகனங்கள் மோதிய விபத்து; எழுவர் உயிர்த் தப்பினர் !

பத்துகாஜா மே. 27- இங்கு  மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஏழுவர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர்.
இந்த விபத்து நேற்று இரவு 11 மணியளவில் ஈப்போ – லுமுட் சாலை ( பத்துகாஜா பெர்டானா எதிர்புறம் ) நிகழ்ந்தது.

இந்த விபத்தில் புரோட்டோன் , தோயோத்தா, கேமிரி ரக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டன.

இதில் புரோட்டோன் ரக காரில்  நான்கு இந்தியர்கள் , தோயோத்தா கேமிரி ரக காரில்  இரு இந்தியர்களும் பயணம் செய்தனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தின் இடுக்கில் சிக்கிய இருவர் கடுமையான காயங்களுடன் உயிர்த் தப்பினர் . அவர்கள் இருவரும் மருத்துவச்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker