Latestமலேசியா

வேகாத ‘பர்கரை’ வாங்கி ஏமாந்த பெண்!

கோலாலம்பூர், மே.27- இங்குள்ள பிரபலமான பேரங்காடியில்  செயல் பட்டு வரும் திரையரங்கு ஒன்றில் படம் பார்க்க வந்தவர்களுக்கு வேகாத பர்கர் இறைச்சியைத் தந்ததால் அதிர்ச்சியில் உறைந்தார்.

பாவ்லின் என்பவரின் நண்பர் அந்தப் பர்கரில் பாதியை உண்ட பின்னர், அந்த இறைச்சி வேகாத நிலையில் இருப்பதைக் கொண்டுப் பிடித்துள்ளார்.

இதனை அடுத்து, பாவ்லினும் அவரது நண்பர் சம்பந்தப்பட்ட பர்கர் கடை ஊழியரைக்  கேட்டபோது, பர்கரை மாற்றிக் கொடுப்பதாகவும்  நீர்க் கிழங்கு போன்றவற்றைத் தர முடியாது எனக் கூறியுள்ளனர்.

இது சம்பந்தமாக  திரையரங்கு உரிமையாளரிடமிருந்து   சரியான பதில்  கிடைக்கப் பெறததால் தமது முகநூலில் அதனைப் பகிர்ந்து உள்ளதாகத்  தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டப பேரங்காடி நிர்வாகம் தொடர்பு கொண்டு , அவருக்கான இழப்பீட்டைத் தருவதாக தெரிவித்துள்ளது.  

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker