Latestமலேசியா

கடத்தல் மது பானங்கள்: சுங்கத்துறை பறிமுதல் !

அலோர் ஸ்டார், மே.28- நாட்டிற்குள் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரிம.244,000 வெள்ளி மதிப்பிலான மது பானங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இலாகாவிற்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை கோலா கெடா கார்கோ ஜெத்தி பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஆள் இல்ல லாரி ஒன்றில் இந்த மது பானங்களை கண்டோம் என மாநில சுங்கத்துறை இயக்குனர் டத்தோ ஜொகாரி தெரிவித்தார்.

அல்லோரியின் பின் புறத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் சுமார் 1,800 மதுபான போத்தல்கள் (29 ரகம்) இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரிம. 104,000 வெள்ளி இருக்கும்.

அதன் அடிப்படையில் இதன் மொத்த சுங்க வரி ரிம. 140,000 வெள்ளியை எட்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த லாரி லங்காவி தீவில் இருந்து சரக்கு கப்பல் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முறைப்படி சுங்கத்துறைக்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக இந்த மதுபானன போத்தல்களை கடத்தி வந்துள்ளனர். எனவே 1967ஆம் ஆண்டு சுங்கத்துறை சட்டம் செக்‌ஷன் 135(!)(டி) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker