Latestமலேசியா

கரும்பு இயந்திரத்தில் சிக்கி இளம் பெண்ணின் கை சிதைந்தது!

தாவாவ், மே 28- இங்குள்ள கம்போங் செந்தோசா எனும் இடத்தில் 25 வயதான பெண்ணின் கை, கரும்பு அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிச் சிதைந்தது.

இன்றுக் காலை 10 மணியளவில் ஏரா ஃபஸிரா என்ற அந்தப் பெண், கரும்பு அரைத்துக் கொண்டிருக்கும்போது,  இந்த விபத்து ஏற்பட்டது என்று தாவாவ் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத் தலைவர் ஷாருடி டெலாமின் தெரிவித்தார்.

காலை 10 மணியளவில் அவசர அழைப்பு கிடைக்கப் பெற்று, சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள்  ஏரா ஃபஸிராவின்  கையை கரும்பு அரைக்கும் இயந்திரத்திலிருந்து காலை 10.40 மணியவில் வெளியே  மீட்டு எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் சிகிச்சைக்காக தாவாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஷாருடி டெலாமின் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker