Latestஉலகம்

பள்ளிப் பிள்ளைகள்மீது கத்திக் குத்துத் தாக்குதல்! ஜப்பானில் அதிர்ச்சி

கவாசாக்கி, மே. 28- ஜப்பானின் கவாசாக்கி நகரில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளிப் பிள்ளைகளின் கூட்டத்தில் புகுந்து கத்திக் குத்து தாக்குதல் நடத்திய ஓர் ஆசாமியின் கொடூரச் செயலால் இரண்டு பள்ளிப் பிள்ளைகள் உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் கவலைக்கிடமாக உள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மொத்தம் 16 பள்ளிப் பிள்ளைகள் காயமடைந்துள்ளனர். இந்த அராஜக தாக்குதல் நடத்திய நபர் பின்னர் தனக்குத்தானே கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டதாகத் தெரிய வந்து உள்ளது.

எனினும், அவனை போலீசார் கைது செய்து மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்து விட்டான்.

இந்தக் கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காலை 7. 44 மணியளவில் பள்ளிப் பிள்ளைகள் பேருந்துக்காக காத்திருந்த வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker