Latestமலேசியா

பிளாஸ்டிக் கழிவு இறக்குமதி: உடனடியாக தடுக்க கோரிக்கை!

ஈப்போ, மே.28- பிளாஸ்டிக் கழிவு வர்த்தகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. பிரிட்டன் தொலைக்காட்சி தொகுப்பாளரான பெர்ன்லேய் – வித்திங்ஸ்டால், ஈப்போவில் உள்ள வனப்பகுதியில் சுமார் 6 மீட்டர் உயரம் வரை  குவிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அடையாளம் கண்டுள்ளார்.

அவை அனைத்தும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தது. அதில் பிரிட்டிஷ் பல்பொருள் அங்காடிகள் மற்றும் குழு மறுசுழற்சி துறைகள் கைரேகைகள் உள்ளது என்றும்  அந்நாட்டு ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இவ்விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என  பேரா மாநில சுற்றுசூழல் பாதுகாப்பு செயற்குழு தலைவர் டாக்டர் அப்துல் அஸிஸ் பரி முன்னதாக கருத்துரைத்திருந்தார். அவரை தொடர்ந்து பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் தற்பொழுது தனது கருத்தினை முன்வைத்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட  அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும்  அழிக்க முடியாது. குறிப்பாக அசுத்தமான, கலப்பு மற்றும் குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாது.

சுங்கை பட்டாணி, ஈப்போவில் இந்த கழிவுகளை வீசுகின்றனர். அதனை சட்ட விரோதமாக எரித்து அழிக்கின்றனர். இதனால் காற்று தூய்மைக்கேடு அடைகின்றது. சுற்றுசூழல் பாதித்தால் மக்களும் பாதிப்படைவர்.

இந்த பிளாஸ்டிக் கழிவு வர்த்தகம் சுற்றுச் சூழலை பாதிப்பது மட்டுமின்றி அதனை சுத்தம் செய்வதற்கும் பெறும் செலவுகளும் ஏற்படுத்தும். இந்த சுமையும் வரி செலுத்துபவர்கள் மீது தான் விழும் என இச்சங்கத்தின் ஆராய்ச்சி அதிகாரி எஸ். மகேஸ்வரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த அந்நிய நாட்டின் பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு பல துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அரசாங்கம் ஒரு சில சட்டவிரோத மறுசுழற்சி மையங்களை மூடினால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் வேறு இடங்களுக்கு மாறிவிடுகின்றனர். இதனால் இச்செயல்பாடுகளை முழுவதுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker