Latestவாழ்க்கை

புறணி பேசுவதில் கில்லாடி யார்? ஆணா, பெண்ணா? – -கலக்கல் ஆய்வு

லண்டன், மே.28- ஆண்களும் சரி, பெண்களும் சரி  மற்றவர்களைப் பற்றி புறணி பேசி புரளியைக் கிளப்பாமல்  இருக்க போவதில்லை. அதில் யார் எந்தப் பொருளை கதையை அதிகம் பேசுகிறார்கள் என ஒப்பிட்டுப் பார்க்கும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெண்களை விட  ஆண்களே அதிகம் புறணி பேசுபவர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்களில் சராசரியாக ஐந்து பேரில் ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு புறணி பேச மட்டும் சுமாராக 3 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கிறார்கள். அதுவும் வேலை நேரத்தில் பெண் தோழிகள் பற்றி பேசுவது மற்றும் பதவி உயர்வில் இருக்கும் ஊழியர்கள் பற்றியும் தனக்கு எதிராக இருப்பவர் பற்றியும் பேசுவது என்றால் அலாதியான பிரியம் என அண்மைய ஓர் ஆய்வில்  தெரியவந்துள்ளது.

பத்து பேரில் ஓர் ஆண் ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி ரொம்ப கேவலமாக பேசுவது, அவரைப்பற்றி தவறான விஷயங்களை பரப்புவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார். இதில் பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்கள் குறைவு தான்.

வேலை நேரத்தில் சாதாரணமாகவே புறணி பேசும் ஆண்கள் 55% என்றால் இதில் பெண்கள் 46% தான். அந்த 46% பெண்களும் பெரும்பாலும் குடும்ப பிரச்சனை, சீரியல் கதைகள், பழைய தோழிகள், அழகு குறிப்புகள், பக்கத்து வீட்டுக்கார ர் செயல்பாடு ஆகியவற்றை தான் பேசுவார்களாம்.

அதே போல ஆண்களின் விருப்பமான தலைப்புகள் என்றால் பழைய பள்ளி நண்பர்கள், அலுவலகத்தில் இருக்கும் கவர்ச்சியான பெண் பணியாளர், சம்பள உயர்வு, பின் கடைசியாக நெருங்கிய நண்பனின் வெற்றிக் கதைகள் போன்றவையாகும்.

அலுவலகத்தில் தான் இப்படி இருக்கிறதே என்று வீட்டிற்கு வந்தால் நண்பர்களிடம் என்ன பேசுவார்கள் என்றால் 17% ஆண்கள்  காம கதைகள் அதிகம் பேசுகிறார்களாம். 10% பெண்களும் இதேவேலையைத்தான் செய்கிறார்கள்.

அதிலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளுக்கு கணவன்மார்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை சொல்லிக் கொடுப்பதில் தான் நேரத்தை அதிகம் செலவு செய்கிறார்கள்.

இந்த ஆய்வை நடத்திய டேவிட் சேல்ஸ் என்பவர் பெண்கள் மட்டும்தான் புரளி பேசுவார்கள் என்று இங்கே ரொம்ப காலமாய் சொல்லி வந்திருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆண்கள் தான் புறணிக்கு பெண்களை விட முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என தெரியவந்திருப்பதாக கூறியுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker