Latestமலேசியா

மரோத்தோன் வீராங்கனையை காரில் மோதிய நபருக்கு 4 ஆண்டு சிறை!

கோலாலம்பூர், மே. 28-  மாரத்தோன் ஓட்டப்பந்தய வீராங்கனையான எவ்லின் ஆங் என்பவரை காரில் மோதி அவருக்கு மரணம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் மெக்கானிக்கான தியோ தியாம் லிம் என்பவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்த நபரின் வாகன உரிமம் மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையும் வாகன உரிமம்  ரத்தும்  உடனடியாக நடப்புக்கு வருகிறது.

அவருக்கு விதிக்கப்பட்ட 7,000 ரிங்கிட் அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நீதிமன்ற தீர்ப்பில் மாஜிஸ்ட்ரேட் ரோஸ்லிஷி சுலைமான் தெரிவித்தார்.

தியோவின் வயதான தாயாரையும் அவருடைய வயதான மூத்த சகோதரனையும் கருத்தில் கொண்டு அவருக்கான தண்டனை குறைத்து வழங்கப்பட வேண்டும் என்றும் தண்டனை அமல்படுத்தப் படுவதை சற்று தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி நெக்கோ  நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அரசுத் தரப்புடன் மாஜிஸ்ட்ரேட் கலந்தாலோசித்த பின்னர் வழக்கறிஞர் ரவி நெக்கோவின் கோரிக்கையை நிராகரித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ‘கிள்ளான் சிட்டி இண்டர்நேஷனல் மரோத்தோன் என்ற நெடுந்தூர ஓட்டப்  போட்டியில் பங்கேற்று இருந்த எவ்லின் ஆங் உள்பட மூவர் மீது  காரினால் மோதி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தியோ தியாம் மீது  நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த விபத்தில் எவ்லின் தலையில் படுகாயமடைந்து சுய நினைவு திரும்பாமலேயே இறந்து போனார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker