Latestமலேசியா

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத நண்பனை தாக்கிய நபர்

ஜோர்ஜ்டவுன், மே 28 – வாங்கிய கடனை மீண்டும் செலுத்த தவறியதால்,  நண்பனை தாக்கிய சம்பவம் லோரொங் செக் சுவானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சண்டையில்,நண்பனிடம் கடன் வாங்கிய 44 வயதுடைய அஜித்பால் சிங் கோபால் சிங், தலையில் பலத்த காயங்களுடன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ரத்தக் காயங்களுடன் சாலையோரத்தில் விழுந்துக் கிடந்த அஜித்பால் சிங் கோபால் சிங் காவல்துறை அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார். முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வரும் அவருக்கு மூக்கு எலும்பு உடைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக நம்ப்படும் மூவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் கொடுத்த 54 வயது நபர், தன்னுடைய நண்பர் தன்னிடம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்காதால் அவரை கண்ணாடியைக் கொண்டு தாக்கியதாக தெரிவித்துள்ள வேளை மேலும் இருவர் சம்பவத்தன்று உடன் இருந்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர் மேலும் அவர்களின் தடுப்பு காவல் நீடிக்கப்படும் என எதிர்ப்பாக்கபடுகிறது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம், பிரிவு 326 இன் கீழ் விசாரிக்கப்படும் என பினாங்கு போலிஸ் படை துணை ஆணையர் சே சாய்மாணி சே அவாங் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker