Latestமலேசியா

டிவெட்’ தொழில் பயிற்சிகள்: சம்பளம்  அதிகரிக்க வழி வகுக்கும்! – குலசேகரன்

கோலாலம்பூர், மே. 28-  நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிலாளியும் குறிப்பாக  துப்புரவுத் தொழிலாளி உட்பட ஒவ்வொருவரும் தங்களின் தொழில்திறனை வளர்த்துக் கொள்வார்களானால் அவர்கள் ஒரு நல்ல வருமானத்தைப் பெற முடியும் என்று மனித வளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

சிங்கப்பூரினால் இது முடியுமெனில், ஏன் நம்மால் முடியாது என்று அவர் கேள்வி எழுப்பினார். டிவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த வேலைக் கல்விப் பயிற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்றால் தொழிலாளர்களின் சம்பளம் 10 முதல் 20 விழுக்காடு வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது அமைச்சர் குலசேகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். டிவெட்  தொழிற்பயிற்சி கழகங்கள் வழக்கம் போல் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் செயல்படுகின்ற நிலையிலிருந்து மாற்றப்பட்டு மாலை5.30 மணியிலிருந்து இரவு 11மணி வரையில் செயல்படுவது சிறப்பாக இருக்கும் என்று அமைச்சர் குலசேகரன் ஆலோசனை கூறினார்.

புதிய தொழில் பயிற்சிக்கான வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக, சில முதலாளிகள் தங்களின் தொழிலாளர்களை இத்தகைய பயிற்சிக்கு அனுப்புவதற்கு தயங்குவது குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய தொழில்கல்வி பயிற்சிகளில் பங்கேற்கும் தங்களது தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் நிறுவனத்திற்கு வேலைக்கு திரும்ப மாட்டார்கள் என்று முதலாளிகள் சிலர் அச்சத்தில் இருப்பதால் அவர்கள் பயிற்சிக்கு அனுப்பத் தயங்குகிறார்கள்.  இப்பிரச்சினையைக் களைவதற்கு  இரண்டு தரப்புக்களுக்கும் சாதகமான நிலையில் திட்டங்கள் வகுக்கப்படும் என்று குலசேகரன் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker