Latestமலேசியா

சபா கிரேப் ஓட்டுநர் கொலை; தொழில் செய்ய மற்றவர்கள் அச்சம்

கோத்தா கினபாலு, மே 29 – சபா, துவாரானில் கிரேப் ஓட்டுநரான முகமட் ஹனாபீ  ஜாபார்(வயது 27) கொள்ளையர்களால் கொல்லப்பட்டதை அடுத்து மற்ற கிரேப் ஓட்டுநர்கள் தொழில் செய்வதில் கலக்கமும் அச்சப்படுவதாகவும்  தெரியவருகிறது.

ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு தரப்பட வேண்டுமென அவர்கள் கோருகின்றனர். முகமட் ஹனாப்பைக் கொன்றதாக  சபாவைச் சேர்ந்தவரும் ஒரு வெளிநாட்டுக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமட் ஹனாபி கொலை செய்யப்பட்டு துவாரான் சாபண்டாரில் உள்ள புதரில் வீசப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.  அது திருடுவதற்கான கொலை என போலீசார் தெரிவிக்கின்றனர்.

அந்தக் கொலையானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், கிரேப்பை பதிவு செய்வோருக்கு வாடகைக்காரின்  எண் பட்டை, ஓட்டுநரின் புகைப்படத்தோடு விவரம் தெரிவிக்கப்படுகிறது.

அது போன்றே, பயணியின்  பெயர், புகைப்படம் மற்றும் விவரங்களைத் தந்தால், அது ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker