Latestமலேசியா

வர்த்தகரிடம் கொள்ளை: 7 போலீஸ் அதிகாரிகள் ஜாமீனில் விடுவிப்பு!

கோலாலம்பூர், மே. 29- நாணய வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டிருந்த 7 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 6 தனிநபர்கள் ஆகியோர் நேற்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்து கொண்ட 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரின் போலீஸ் தடுப்புக் காவல் முடிவடைந்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் படையின் தலைவர் டத்தோ ஸ்ரீ மஸ்லான் லாஷிம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து விட்டன. இது தொடர்பாக விசாரணை அறிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக துணை பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த கொள்ளைச் சம்பவம் மிக கடுமையான, சம்பவம் என்பதால் இதுபோன்ற குற்றச் செயல்களை விட்டுக் கொடுக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மே 19 ஆம் தேதியன்று, நாணய வர்த்தகர் ஒருவரை மடக்கி அவரை மிரட்டி கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரிங்கிட் வரை பணம் பறித்ததாக இவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker