Latestமலேசியா

விபத்துக்குள்ளான டிரெய்லர் லோரியில் போதைப் பொருள்

கோலாலம்பூர், மே 29- ஜாலான் பிந்தாஸ் ரவாங் (ரவாங் பய்பாஸ்) 4.7 கிலோமீட்டர் அருகே நடந்த டிரெய்லர் லோரி விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரியிலிருந்து போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது.

நேற்று நடந்த இந்த விபத்தில் டிரெய்லரிலிருந்து சாலையில் கவிழ்ந்த கிரேனை மோதியதில் 31 வயதான மோட்டார் ஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்ததை ஒட்டி அவர் செலாயாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் பாக் பாய் தெரிவித்தார்.

உலுயாமிலிருந்து திரங்கானுவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த இந்த டிரெய்லர் லோரி மலை ஏறிக் கொண்டிருக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அதிலிருந்து கீரேன் சாலையில் விழுந்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரியை சோதனையிட்டதில் 2 பொட்டளம் போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, மேற்கண்ட விசாரணையில் 47 வயதான டிரெய்லர் லோரி ஓட்டுனரும் போதை நிலையில் இருந்ததாக லிம் பாக் பாய் தெரிவித்தார்.

இந்த விபத்து 1987-லின் சாலை போக்குவரத்துச் சட்டம் பிரிவின் 41 கீழ் விசாரணைச் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker