Latestஉலகம்

நிர்வாணமாக கணவனை காரின் மேல் படுக்கவைத்து நகர்வலம் வந்த மனைவி! என்னப்பா நடந்தது?-(Video)

பராங் குய்ல்லா, மே. 29- கொலம்பியா நாட்டில் உள்ள பராங் குய்ல்லா என்ற இடத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் மற்றொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடிபட்ட கணவனுக்கு அவருடைய மனைவி வித்தியாசமான தண்டனையை கொடுத்தார்.

அந்த நபரை நிர்வாணமாக தன்னுடைய காரின் மீது படுக்கவைத்து நகர் முழுவதும் ஊர்வலமாக வந்தார். மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு இந்தத் தண்டனை அமைந்திருந்ததாக பலரும் கருத்துரைத்து உள்ளனர்.

video  source: you tube-my news tv

கையும் களவுமாக பிடிபட்ட பின்னர், தன்னுடைய தவறுக்காக மன்னிக்கவேண்டும் என்று மனைவியிடம் மன்றாடிய ஜாய்ரோ வர்க்காஸ் என்ற அந்த நபரை மன்னிக்க வேண்டுமானால் தான் விதிக்கும் நிபந்தனையை ஏற்கவேண்டும் அவருடைய மனைவி கூறினார்.

அதன் படி அந்த நிபந்தனை ஜாய்ஸ் ஏற்றுக் கொண்டார். நிபந்தனைப் படி தன்னுடைய காரின் மேல் நிர்வாணமான நிலையில் அவர் படுக்க வைக்கப்பட்டார்.

பின்னர் அந்தக் காரை நகரின் பல பகுதிகளில் ஓட்டிச் சென்றார் அவருடைய மனைவி. சாலையோரங்களில் நிறைய பேர் கெக்ககலித்து அந்த நபரை நோக்கி கேலிக் கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவில் படம் பிடித்து அதனை சமூக ஊடகங்களிலும் அரங்கேற்றினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker