Latestமலேசியா

ஐஏஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய ஒரு மலேசியர் உட்பட மூவர் கைது!

கோலாலம்பூர், மே.30- மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனைகளில் ஐஎஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புள்ள மூன்று நபர்களை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அரச மலேசியா காவல் படையின் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

சிலாங்கூர், கெடா, சபா ஆகிய மாநிலங்களில் மே 17ஆம் தேதி -மே 30 ஆகிய தேதிகளுக்கிடையே  இம்மூன்று நபர்களை கைது செய்துள்ளோம். கடந்த மே 17ஆம் தேதியன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் 42 வயதுடைய மலேசிய பிரஜையை கைது செய்தோம். குத்தகையாளரான அந்த நபர் சினாயில் உள்ள ஐஏஸ் தளத்திற்கு செல்ல எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருந்தான். அந்நபர் கடந்த வருடம்”பேஸ்புக்” சமூக தளம் வாயிலாக ஐஎஸ் தீவிரவாத கும்பலின் முக்கிய தலைவன் அபு பாக்கார் அல்- பக்டாடியிடம் உறுதிமொழி எடுத்துள்ளான்.

தொடர்ந்து கடந்த மே 26ஆம் தேதி சபா, கெனிங்காவ் பகுதியில் இரண்டாவது நபரை கைது செய்துள்ளோம். 20 வயது இந்தோனேசிய பிரஜையான அவன், தென் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள சபா மாநிலத்தில் ஊடுருவி இருந்தான் என கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.

அவனை அடுத்து,  ஐஎஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய மூன்றாவது நபர் இன்று கோல கெடாவில் கைது செய்யப்பட்டுள்ளான். வங்களதேச பிரஜையான அவன் வெடி மருந்து தயாரிக்க தேவைப்படும் இரசாயன கலவைகளை உருவாக்கும் திறன் பெற்றவன். 28 வயதுடைய அந்த நபர் கப்பலில் துணை மெக்கானிக்காக பணி புரிந்து வந்துள்ளான் என  இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இதனிடையே இத்தீவிரவாத கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு இந்தோனேசிய நபரையும் காவல் துறை தேடி வருகின்றது. மர்வான் என பெயர் கொண்ட அந்த ஆடவன் கடந்த மே 26ஆம் தேதி கெனிங்காவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தப்பி சென்று விட்டான்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker