Latestமலேசியா

கூடுதல் மின் கட்டணமா? -ஆய்வுக்குப் பின் திருப்பித் தரப்படும்!- டிஎன்பி

மலாக்கா, மே. 30- அளவுக்கு அதிகமாக கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தக் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெனாகா நேஷனல் அறிவித்திருக்கிறது.

அண்மைய காலமாக அளவுக்கு அதிகமான மின்சாரக் கட்டண ரசிதுகளை பெற்று இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த கட்டணம் திருப்பி தரப்படும் என்று அது தெரிவித்தது.

சிலரது கட்டணங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டிருப்பதாக அது கூறியது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு புகாரும் நன்கு விசாரிக்கப்படும் என்று டிஎன்பி கூறியது.

முதலில் அவர்களுக்கான மின்சாரக் கட்டணம் உண்மையிலேயே கூடுதலாக விதிக்கப்பட்டு இருக்கிறதா? என்பது ஆராயப்பட்டு, அதன் பின்னர் அவ்வாறு தவறு நடந்து இருக்குமேயானால் அந்த கட்டணம் திருப்பி அவர்களின் கணக்கிலேயே சேர்க்கப்படும் என்று அது விளக்கியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker