Latestஇந்தியா

மோடி பதவியேற்பு; ராகுல்- சோனியா பங்கேற்பு  ஸ்டாலின் – கமலுக்கு அழைப்பு!

புதுடெல்லி, மே. 30 -பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பங்கேற்கின்றனர்.
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார்.

டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் உலக நாடுகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர் .

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker