Latestமலேசியா

எம்எச்17 விமானம் ரஷ்யர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? ஆதாரம் வேண்டும் -துன் மகாதீர்

தோக்கியோ, மே 31 – 2014ஆம் ஆண்டு யுக்ரேய்ன் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மாஸ் நிறுவனத்தின்  எம்எச்17 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான் என்பதற்கான வலுவான ஆதாரம் வேண்டுமென பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

அது பற்றிய ஹாலந்து நாட்டின் அறிக்கையில்,  ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையினால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதனைச் செய்தது ரஷ்யாதானா என்பது தெரிவில்லை. மேலும் அந்த ஏவுகணையை யுக்ரோய்ன் ராணுவமும் அப்போது வைத்திருந்ததால், அந்நாடு கூட விமானத்தைச் சுட்டிருக்க சாத்தியம் இருக்கிறது.

மேலும், விமானத்தின் கருப்புப் பெட்டியைப் பரிசோதிக்க மலேசியா அழைக்கப்படவில்லை எனும்போது, அது ரஷ்யாவை குறி வைத்தே குற்றம் சாட்ட அரசியல் ரிதியான நடவடிக்கை என  மகாதீர் சுட்டிக்காட்டினார்.

எம்எச் 17 விமானம் 2014 ஜூலை 17ஆம் தேதி ஆம்ஸ்டர்டாமில் இருந்து  298 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் கோலாலம்பூருக்குப் பயணித்தது. அது யுக்ரேய்ன் வான் வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டு அனைத்துப் பயணிகளும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker