Latestமலேசியா

லோரி தடம் புரண்டது: கணவர் மரணம்! மனைவி-பிள்ளைகள் படுகாயம்!

கம்பார், மே 31- வடக்குத் தெற்கு  நெடுஞ்சாலையின்  309 ஆவது கிலோ மீட்டரில் டிரெய்லர் லோரி  ஒன்று மரத்தில் மோதி தடம் புரண்டதில்,  கணவர் மரணமடைந்த வேளையில் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் படுகாயம் அடைந்தனர்.

இன்று காலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் முகமட் சுஃபியான் மகாதீர் (வயது 28 ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில்  அவரது மனைவி சித்தி ஹஸ்பா சுஹைலாவுக்கு (வயது 26) இடது பக்க முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

முகமட் குசாய்ரி (வயது 5),  இந்தான் நூர் சஸ்வானி (வயது 4) ஆகிய அவரின் இரண்டு பிள்ளைகளுக்கும் இடதுக் கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

தொடக்கக் கட்ட விசாரணையில் வீட்டுப் பொருள்களை ஏற்றி வந்த  இந்த டிரெய்லர் லோரி,  கெடா  பெண்டாங்கிலிருந்து ஜோகூரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் கட்டுப்பாட்டை இழந்து,  மரத்தில் மோதி தடம் புரண்டதாகவும்  கம்பார் மாவட்ட போலீஸ் சூப்ரிண்ட்.  ஹஸ்ரோன் நஸ்ரி தெரிவித்தார்.

இறந்தவரின் உடல்,  பிரேதப் பரிசோதனைக்காக கம்பார் மருத்துவமனைக்குப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த மற்ற மூவரும் தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், இந்த விபத்து 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)இன்  கீழ் விசாரணை செய்யப்படும் என்று ஹஸ்ரோன் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker