Latestவிளையாட்டு

தென்கொரிய கால்பந்து குழுவின் அசிங்கமான செயல்: வெற்றிக் கிண்ணம் பறிப்பு!

பெய்ஜிங், ஜூன், 1- சீனாவில் நடந்த பண்டா கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியனாக வாகை சூடிய தென் கொரியாவின் 18 வயதுக்கு உட்பட்ட கால்பந்துக் குழுவின் வெற்றியாளர் கிண்ணம் பறிக்கப்படுகிறது.

வெற்றிக்குப் பின்னர் முறைகேடான முறையில் பண்டா கால்பந்து சாம்பியன் கிண்ணத்தை கீழே வைத்து அதன் மீது ஓர் ஆட்டக்காரர் காலை தூக்கி வைத்து நின்று படம் பிடித்த சம்பவம் கால்பந்து வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கால்பந்து போட்டியில் வெற்றிப் பெற்ற எந்தவொரு குழுவின் ஆட்டக்காரரும் சாம்பியன் கிண்ணத்தை கீழே வைத்து அதன் மீது காலை தூக்கி வைத்து படம் எடுக்கும் சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை.

இந்தச் சம்பவம், பல கோடி வலைத்தள வாசிகளின் கவனத்தை ஈர்ப்பதோடு கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானது. சீன கால்பந்து ரசிகர்களும் பொதுவான கால்பந்து ரசிகர்களும் இதனை மிக மோசமான அவமதிப்பாக கருதுகின்றனர்.

தென் கொரியாவைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட கால்பந்து குழு, சீனாவில் நடந்த பண்டா கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் 3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

தென்கொரிய அனிக்கு வழங்கப்பட் ட சாம்பியன் கிண்ணத்தை பறித்துக் கொள்வதற்கு சீனா முடிவு செய்துள்ளது. அதேவேளையில் பண்டா கிண்ண கால்பந்து போட்டிக்கு தென்கொரியாவை மீண்டும் ஒருமுறை அழைப்பதே இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கோடிக்கணக்கான சீனக் கால்பந்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தனர். மிகவும் மோசமான, காட்டுமிராண்டித்தனமான, அசிங்கமான செயல் என்று அவர்கள் வர்ணித்தனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker