Latestமலேசியா

கடத்தல் கும்பல் முறியடிப்பு: ரிம. 32 லட்சம்  போதைப் பொருள்  மீட்பு!

ஜொகூர் பாரு, ஜூன். 2-  கடந்த 2 நாட்களில் நான்கு இடங்களில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் மூலம் மூவர் கைது செய்யப்பட்டதோடு மேலும் 32 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டது.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடவடிக்கைகள் கடந்த 5 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் ஜொகூர் போலீசாரும் புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்பு குற்றவியல் புலனாய்வுத் துறையும் இணைந்து நடவடிக்கைகளில் இறங்கியதாகவும்   ஜோகூர் மாநில போலீஸ் படை தலைவர் டத்தோ   முகமட் காலில் காதர் சொன்னார்.

இந்தப் போதைப் பொருள் கும்பலின் முக்கிய புள்ளிகளாக கருதப்பட்ட 27 வயது முதல் 31 வயதுடைய மூவரை போலீசார் காலை 3 மணிக்கும் 6 மணிக்கும் இடையே மூன்று வெவ்வேறு  இடங்களில்கைது செய்தனர். மூன்று   இடங்களில் போலீசார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டு இந்த நபர்களை கைது செய்ததாக அவர் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker